Welcome to Land Rover Defender Sri Lanka. Please log in or sign up.
Total Members
48
Total Posts
468
Total Topics
250
  • Defender’s இறக்குமதி தொடர்பான சந்தேகம்
    Started by Arun_Jeevan
    Read 147 times
    Previous topic - Next topic
வணக்கம் நண்பர்களே,

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இலங்கையில் வாகன இறக்குமதி  தடைசெய்யப்பட்டிருந்தது. ஆனால் பிப்ரவரி 1, 2025 அன்று இந்த தடை நீக்கப்பட்டது. இதனால் சில வாகனங்கள் மீண்டும் இறக்குமதி செய்யப்படுகிறதாம்.

தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் புதிய Defender's இறக்குமதி செய்யப்படுகிறதா ?

மேலும், யாராவது சமீபத்தில் Defender வாங்க முயற்சித்திருந்தால், உங்கள் அனுபவங்களை இங்கே பகிருங்கள். தாமதங்கள், செலவுகள், மற்றும் தேவையான ஆவணங்கள் பற்றிய விவரங்களை இங்கே பகிருங்கள் மிகவும் உதவியாக இருக்கும்.

தகவல் பகிர்ந்து உதவுங்கள்! :)

ஆமா நண்பரே, 2025 பிப்ரவரி 1ம் தேதி இறக்குமதி தடையை நீக்கிய பிறகு UK மற்றும் Japan ஆகிய நாடுகளிலிருந்து புதிய Land Rover Defender வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுகிறதாம். ஆனா இந்த process முழுக்குமுழுக்க smooth இல்ல.

Customs மற்றும் harbour பகுதியில் சில தாமதங்கள் இருக்கு. மேலும் பதிவு செய்ய தேவையான ஆவணங்கள், emission test approvals எல்லாம் இப்ப நிறைய strict ஆகி இருக்கு.

இதே process ல யாராவது recentல try பண்ணிருந்தீங்கனா, உங்களுடைய அனுபவத்தை இங்கே பகிருங்கள் – செலவுகள், தேவையான டாக்குமெண்ட்ஸ், டிலேஸ்னு – எல்லாம் தெரிய வந்தா எங்களுக்கும் நிச்சயமாக உதவியாக இருக்கும்!  :)